மியான்மரில் பெண்ணை கொடூரமாக தாக்கும் ராணுவத்தினர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது

cctv woman myanmar
By Jon Mar 12, 2021 01:41 PM GMT
Report

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பெண் ஒருவரை ராணுவ வீரர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் மீது ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை முன்னெடுப்பதுடன் துப்பாக்கி சூடும் நடத்தி வருகின்றனர்.

நேற்று ஒரேநாளில் மியாவின் நகரத்தில் போராட்டம் நடத்திய 7 பேர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் தலையில் சுடப்பட்டு உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர், இந்நிலையில் பெண் ஒருவரை ராணுவ வீரர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.