முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

Myanmar Aung San Suu Kyi
By Sumathi Dec 31, 2022 06:49 AM GMT
Report

முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அதில், மோசடி நடந்ததாகக் கூறி, ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை! | Myanmar Again Finds Suu Kyi Guilty Of Corruption

அதன்படி, ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பல்வேறு வழக்குகளிலும் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு

 மேலும் 7 ஆண்டு

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவரை விடுதலை செய்ய ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்திய நிலையில், அவருக்கு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.