அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்தான் ஆங் சான் சூகி.
இவர் கடந்த 2020ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மியான்மர் ஆட்சியை கைப்பற்றினார்.
ஆனால், தேர்தலில் ஆங் சான் சூகி மோசடி செய்தார் என்று கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கையில் எடுத்தது.
இதன் பின்பு, ஆங் சான் சூகியை ராணுவ போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பல குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஊழல் வழக்கு ஒன்றில் ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து மியான்மர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
