என் மகன் கொல்லப்படலாம் - பதறும் எலான் மஸ்க் தந்தை
மஸ்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரின் தந்தை அச்சம் தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து
டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வருபவர் எலான் மஸ்க். கடந்த வருடம் ட்விட்டரை சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.
அதனைத் தொடர்ந்து அடிக்கடி தனது அதிரடி முடிவுகளால் ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரபல பத்திரிக்கை "எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்" என்ற கட்டுரையில், விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள்,
தந்தை அச்சம்
மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்.
உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது என செய்தி வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது, எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன் என அவரது தந்தை எர்ரால் மஸ்க் (77) கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.