கனடா பிரதமரும். ஹிட்லரும் ஒன்றா ? - எலான் மஸ்கிற்கு வலுக்கும் கண்டனங்கள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் தெரிவித்த கருத்து கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி விவகாரம் கனடாவில் கடும் பிரச்சனைகளை கிளப்பியுள்ளது. கனடா - அமெரிக்கா எல்லையை கடக்க தடுப்பூசி கட்டாயம் என்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அறிவிப்புக்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தடுப்பூசி அறிவிப்புக்கு தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி லாரி டிரைவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த கடந்த வாரம் கனடாவில் அவசர பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைப்பதோடு அவர்களுக்கு செல்லும் நிதியுதவியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பிற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரும், டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓவுமான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என ஹிட்லரின் புகைப்படத்தை பதிவிட்டு அவர் சொல்வது போல அந்த மீம்ஸ் பகிரப்பட அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து எலான் தனது பதிவை நீக்கினார். ஆனாலும் இந்த விவகாரம் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. நடந்த சம்பவத்திற்கு எலான் மஸ்க் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டுமென அமெரிக்க யூதக் குழு வலியுறுத்தி உள்ளது.