மகனுக்கு சீட் கேட்பது வாரிசு அரசியலில் வராது - ஜெயக்குமார் விளக்கத்தை கேட்டேங்களா..?

ADMK Chennai D. Jayakumar Election
By Karthick Feb 21, 2024 01:03 PM GMT
Report

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட ஜெயக்குமாரின் மகன் ஜெயாவரதனுக்கு மீண்டும் வாய்ப்பு கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வாரிசு அரசியலாகாது

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேட்பாளராக போட்டியிட A- Form, B-form போன்றவற்றில் கையெழுத்திட்டது கட்சியின் பொதுச்செயலாளர் தான் போட்டார் என குறிப்பிட்டார்.

பெண்மையை இழிவுப்படுத்தி பேசுவதா? கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயக்குமார்!

பெண்மையை இழிவுப்படுத்தி பேசுவதா? கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயக்குமார்!

அதன் காரணமாகவே அவர் வாரிசு அரசியலில் வர மாட்டார் என்று தெரிவித்த ஜெயக்குமார், 2019 தேர்தலில் சொற்ப வாக்குகளில் தான் ஜெயவர்த்ன் தோல்வியுற்றதாகவும் தெரிவித்தார்.

my-son-is-not-nepotism-jayakumar-explains

ஜெயவர்தன் ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அவர், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.