என் தொலைப்பேசி ஒட்டு கேட்கப்படுகிறது - தமிழிசை பகீர் புகார்!
தொலைப்பேசி ஒட்டு கேட்கப்படுவதாக சந்தேகம் இருக்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்
தெலங்கானா ராஜ்நிவாசில், ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``எனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக சந்தேகம் உள்ளது. குறிப்பாக மாநிலத்தில் ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் உள்ளது.

இவை அனைத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டி.ஆர்.எஸ், எம்.எல்.ஏக்களை விலைபேசிய வழக்குடன் தொடர்புபடுத்தி சில சமூக ஊடகப் பதிவுகள் வருக்கின்றன" என்றார். இந்த குற்றச்சாட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார்!
முன்னதாக, தெலங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022ஐ நிறைவேற்றுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இதனை உண்மையல்ல என தமிழிசை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.