இனி ஆடுவது சந்தேகம் தான்..?அவசரமாக நாடு திரும்பிய முஸ்தபிசுர் ரஹ்மான் - ஷாக்கில் CSK ரசிகர்கள்
சென்னையின் இந்த ஆண்டு நம்பிக்கை தரும் பெளலராக உருப்பெற்றுள்ளார் முஸ்தபிசுர் ரஹ்மான்.
முஸ்தபிசுர் ரஹ்மான்
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு புதிய கேப்டன் தலைமையில் விளையாடி வருகின்றது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இது வரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 2 வெற்றியை பெற்றுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. அந்த போட்டியில் சென்னை அணி தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஆடுவது சந்தேகம்..
குஜராத் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் சென்னை அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர் ரஹ்மான், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 7 விக்கெட்டை கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். ஆனால், அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மான், 2024 ஆம் ஆண்டு கரீபியன் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை முன்னதாக தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசத்திற்கு சென்றுள்ளதால், ஐபிஎல் 2024 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அடுத்த ஆட்டத்தை அவர் இழக்க நேரிடும் என தகவல் வெளிவந்துள்ளது.