தோனியிடம் கற்க ஒன்னுமில்ல; முஸ்தஃபிசுர் ரஹ்மான் குறித்து பிசிபி தலைவர் பளீச்!

Chennai Super Kings IPL 2024
By Sumathi Apr 18, 2024 05:15 AM GMT
Report

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் புதிதாக கற்றுக் கொள்ள ஒன்றுமில்லை என பிசிபி தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

முஸ்தாஃபிசுர் ரஹ்மான்

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில், சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

mustafiqur - dhoni

பதிரானா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இருவரின் விளையாட்டும் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள முஸ்தஃபிசுர் ரஹ்மான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் ரேசில் 4வது இடத்தில் இருக்கிறார்.

இவர் மே 1ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதை விடவும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது முஸ்தஃபிசுர் ரஹ்மான் கூடுதலாக கற்றுக் கொள்ள முடியும் என்று வங்கதேச முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

சிஎஸ்கே பிளே-ஆஃப் கூட போகமுடியாது - ஆப்பு வைக்கப் போவதே இவங்கதான்..

சிஎஸ்கே பிளே-ஆஃப் கூட போகமுடியாது - ஆப்பு வைக்கப் போவதே இவங்கதான்..

பிசிபி தலைவர் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வங்கதேச கிரிக்கெட் சங்க தலைவர் ஜலால் யூனுஸ், மே 2ஆம் தேதியே அவர் நாடு திரும்ப வேண்டும். அதன்பின் மே 3ஆம் தேதி ஜிம்பாப்வே டி20 தொடரில் களமிறங்க தயாராக இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி முஸ்தஃபிசுர் ரஹ்மான் புதிதாக கற்றுக் கொள்ள எதுவும் கிடையாது.

தோனியிடம் கற்க ஒன்னுமில்ல; முஸ்தஃபிசுர் ரஹ்மான் குறித்து பிசிபி தலைவர் பளீச்! | Mustafiqur Rahman Nothing To Learn In Ipl Says Bcb

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மற்ற வீரர்கள் தான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கிறது. முஸ்தஃபிசுரை மீண்டும் அழைப்பதற்கு ஜிம்பாப்வே டி20 தொடர் மட்டும் காரணமல்ல. அவர் இங்கு வரும் பட்சத்தில், அவருக்கான வேலைப்பளுவையும் எங்களால் திட்டமிட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.