இது நடந்தால்தான் இனி பேட்டிங்; அடம்பிடிக்கும் தோனி - சிஎஸ்கே அதிருப்தி!
தோனியின் பேட்டிங்கை பார்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஆவலாக காத்திருந்தனர்.
தோனி பேட்டிங்
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியதால் தோனியின் பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், அவர் பேட்டிங் செய்யவில்லை.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி எட்டாம் வரிசைக்கு சென்றுள்ளார். துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோரை தொடர்ந்து அஜின்க்யா ரஹானே, டேரில் மிட்செல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி பேட்டிங் வரிசையில் உள்ளனர்.
இம்பாக்ட் வீரர் விதி
இம்பாக்ட் வீரர் விதி அறிமுகம் ஆகும் முன்பு தோனி ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார். இப்போது கூடுதல் பேட்ஸ்மேன் அணியில் இடம் பெறுவதால் தோனி எட்டாவது வரிசைக்கு சென்றுள்ளார். எனவே, இனி 6 விக்கெட் வீழ்ந்தால் மட்டுமே அவர் பேட்டிங் செய்ய வருவார்.

இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 174 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி, 4 விக்கெட்கள் மட்டுமே இழந்த நிலையில் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது.
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil
அமெரிக்க தூதுக்குழுவை தடுத்த ட்ரம்ப்! அர்த்தமற்ற விடயங்களுக்காக 18 மணி நேர விமானப் பயணங்கள் வேண்டாம் IBC Tamil