தோனியின் பேட்டிங் பார்ம் மோசம் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

ipl2021 msdhoni sanjaymanjrekar
By Petchi Avudaiappan Oct 02, 2021 11:34 PM GMT
Report

ஒரு சிக்ஸரை வைத்து தோனி பழைய பார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கக்கூடாது என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி கடைசியில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் அவர் பழைய பார்முக்கு திரும்பியதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடினர். இதனிடையே ஹைதராபாத் அணிக்கு எதிராக சிக்ஸர் அடித்ததை வைத்து தோனி தனது பழைய பேட்டிங் பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பது நல்லதல்ல. அவரது மோசமான பேட்டிங் பார்ம் சென்னை அணிக்கு எந்தவித பாதகத்தையும் ஏற்படுத்தவில்லை என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

தோனியின் பேட்டிங் பார்ம் தான் மோசமே தவிர கேப்டன்சியில் அவரது பார்ம் மாஸ் என மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். அவரது கேப்டன்சி ரெக்கார்டை முறியடிக்க எந்தவொரு கேப்டனாலும் முடியாது. ஐபிஎல் அரங்கில் 60.1 சதவிகிதம் வெற்றி விகிதத்தை கொண்டுள்ள கேப்டன் தோனி தான் எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.