மட்டன் சாப்பிடும் போது இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - ஏன் தெரியுமா?
ஆட்டிறைச்சி சாப்பிடும்போது எந்த வகையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆட்டிறைச்சி
நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதும் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது உணவு தான். அதிலும் ஊட்டச்சத்து அதிகம் உள்ள அசைவ உணவில் பலருக்கும் பிடித்த உணவாக ஆட்டிறைச்சி உள்ளது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் உள்ளது.
எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சில வகையான உணவுகளைச் சேர்த்து உட்கொள்வது ஃபுட் பாய்சனுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக ஆட்டிறைச்சி அல்லது சிக்கன் சாப்பிடுவதற்கு முன்போ அல்லது பின்னரோ பால் குடிக்க வேண்டாம்.
ஏனெனில் இது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். எனவே ஆட்டிறைச்சி சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிடக்கூடாது.
தவிர்க்க வேண்டும்
ஏனெனில் இறைச்சி சாப்பிட்ட உடனே தேன் சாப்பிட்டாலும் உடல் சூடு பிடிக்கும்.பொதுவாக நம்மில் பலருக்கு உணவுக்குப் பின் காஃபி, டீ குடிக்கும் பழக்கம் உண்டு.அவர்கள் மட்டன் சாப்பிடும்போது இந்த பழக்கத்தைத் தவிர்த்துக்கொள்வது அவசியம்.
மட்டன் சாப்பிட்ட பிறகு காஃபி, டீ இது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.