பாஜகவில் சேர்ந்த 12 மணி நேரத்தில் நீங்கிய இஸ்லாமியர்கள் - அண்ணாமலைக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

BJP K. Annamalai Nagapattinam
By Swetha Apr 01, 2024 12:45 PM GMT
Report

பாஜகவில் சேர்ந்த இஸ்லாமியர்கள் 12 மணி நேரத்தில் பாஜகவில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கிய இஸ்லாமியர்கள்

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவில் சேர்ந்த 12 மணி நேரத்தில் நீங்கிய இஸ்லாமியர்கள் - அண்ணாமலைக்கு காத்திருந்த ட்விஸ்ட்! | Muslims Who Joined Bjp Left Within 12 Hours

அந்த வகையில், நாகப்பட்டினம்அவுரி திடல் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம் ரமேஷை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரையாற்றினார்.

அப்போது, நாகூர் பகுதியை சேர்ந்த சமது என்பவர் சில இஸ்லாமியர்களோடு அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். ஆனால், இணைந்து 12 மணி நேரத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சில்லறை கட்சி.. அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி!

சில்லறை கட்சி.. அண்ணாமலை கருத்துக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி!

அண்ணாமலைக்கு ட்விஸ்ட்

இது தொடர்பாக பேசிய அவர், ஒட்டுமொத்த சமுதாயமும், தனது குடும்பமும் பாஜகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் நாகூர் தர்காவில் பரம்பரை ஆதினமாக இருக்கும் சமது அதிமுகவில் இருந்து, அமமுகவுக்கும், பின் காங்கிரசுக்கும் மாறினார்.

பாஜகவில் சேர்ந்த 12 மணி நேரத்தில் நீங்கிய இஸ்லாமியர்கள் - அண்ணாமலைக்கு காத்திருந்த ட்விஸ்ட்! | Muslims Who Joined Bjp Left Within 12 Hours

இந்த மக்களவை தேர்தல் சமயத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியதால் தனது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.