விஜய்யிடம் இருந்து இஸ்லாமியர்கள் தள்ளியே இருங்க - அகில இந்திய முஸ்லிம் ஜமாத்

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Apr 16, 2025 06:00 PM GMT
Report

விஜய்யிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும் என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி கூறியுள்ளார்.

 விஜய்யின் செயல்பாடுகள்

அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டார். குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்துள்ளார்.

vijay

தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜய்யின் செயல்பாடுகள் இருக்கின்றனர். ஆகவே அவரிடமிருந்து இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன் வெட்கப்படணுமா? பாஜக டெபாசிட் கூட வாங்காது - விளாசிய பிரபலம்

நயினார் நாகேந்திரன் வெட்கப்படணுமா? பாஜக டெபாசிட் கூட வாங்காது - விளாசிய பிரபலம்

ஜமாத் எச்சரிக்கை

விஜய் முஸ்லிம் விரோத, அவரது பின்னணி மற்றும் கடந்த கால நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு எதிரான பல நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன. திரைப்படத் துறையில் தொழிலுக்கு பின்னர் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் முஸ்லிம் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில், முஸ்லிம்களையும் முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களாக சித்தரித்து, அவர்களை “அரக்கர்கள்” மற்றும் “பேய்கள்” என்று சித்தரித்தார்.

அரசியலில் நுழைந்து வாக்குகளைப் பெற முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.