நயினார் நாகேந்திரன் வெட்கப்படணுமா? பாஜக டெபாசிட் கூட வாங்காது - விளாசிய பிரபலம்

Tamil nadu DMK BJP Nainar Nagendran
By Sumathi Apr 16, 2025 12:53 PM GMT
Report

பாஜக டெபாசிட் கூட வாங்காது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பாஜக டெபாசிட்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’அண்ணா உருவாக்கிய மாநில சுயாட்சி என்கிற கருவிற்கு கலைஞர் உருவம் கொடுத்தார்; அந்த உருவத்திற்கு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.

nainar nagendran - rs bharathi

இந்த அரசியல் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு புரியவில்லை என்றால் அண்ணா திமுக என்ற திராவிடக் கட்சியில் இருந்தார் என்பதற்கு வெட்கப்பட வேண்டுமா? "இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும்,

ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதை கேட்டாலே தமிழ்நாட்டிற்கு மட்டும் உரிமைகளை திமுக கேட்கவில்லை. ஒன்றிய-மாநில அரசுகள் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் செயல் எப்படி பிரிவினைவாதமாகும்?

பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான்; அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி பல்டி

பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான்; அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி பல்டி

ஆர்.எஸ்.பாரதி

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் கும்பலும் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைமையும் ஏவும் பணியை மாநிலங்களில் உள்ள பாஜக தலைமை சிரமேற்று செய்து முடிப்பது போல மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரும் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் நினைப்பது அவரின் அரசியல் புரிதல் குறைப்பாட்டை காட்டுகிறது.

நயினார் நாகேந்திரன் வெட்கப்படணுமா? பாஜக டெபாசிட் கூட வாங்காது - விளாசிய பிரபலம் | Dmk Rsbharathi Slams Bjp Nainar Nagendran

திமுக பிரிவினைவாதம் பேசுகிறது" என திராவிட எதிர்ப்பாளர்கள் பேசிய 50 ஆண்டுக் கால பழைய முனை மழுங்கிய வாதத்தை விட்டுவிட்டு, ஒன்றிய அரசின் கட்டளைக்கு அடிபணியும் மாநிலம் தமிழ்நாடு இல்லை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கம் திமுகவுடையது மட்டுமல்ல..

தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம் என்பதால் தமிழ்நாட்டு உரிமைகளை பறித்தால் முன்பைபோல பாஜக 2026 தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.