பொது சிவில் சட்டம் - பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஆதரவு - ஏன்?

India
By Sumathi Jul 12, 2023 05:10 AM GMT
Report

பொது சிவில் சட்டத்தில் சர்வேவில் பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொது சிவில் சட்டம்

இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களிடம் சிவில் சட்டம் குறித்த சர்வே எடுக்கப்பட்டது. கணக்கெடுப்பின்படி, கணக்கெடுக்கப்பட்ட அனைத்து முஸ்லீம் பெண்களில் 67 சதவீதம் பேர் திருமணம்,

பொது சிவில் சட்டம் - பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஆதரவு - ஏன்? | Muslim Women Mostly Favor Of Uniform Civil Code

விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம் வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். 76 சதவீதம் பேர் பலதார மணத்தை ஏற்கவில்லை.

ஆதரவு

வாரிசு மற்றும் பரம்பரை சம உரிமைகள் தொடர்பான கருத்திற்கு 82 சதவீதம் பேர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். விவாகரத்து செய்யப்பட்ட தம்பதிகள் எந்தத் தடையுமின்றி மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை 74 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பொது சிவில் சட்டம் - பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் ஆதரவு - ஏன்? | Muslim Women Mostly Favor Of Uniform Civil Code

மதத்தைப் பொருட்படுத்தாமல் தத்தெடுப்பு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை 65 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்துவதற்கான வலுவான ஆதரவை பெற்றுள்ளது.

கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லீம் பெண்கள், பொது சிவில் சட்டத்துடன் தொடர்புடைய சிவில் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்.