15 வயதை கடந்தால் முஸ்லீம் பெண்கள் திருமணம் செய்யலாம் - உயர்நீதிமன்றம்
15 வயதை கடந்த இஸ்லாமிய பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருமணம்
ஹரியானாவைச் சேர்ந்தவர் ஜாவித்(21). இவர் 16 வயது இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மைனர் திருமணம் என்ற புகாரின் அடிப்படியில் கைது செய்யப்பட்டார். அந்த சிறுமி சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ், தன் மீதுள்ள வழக்கை ரத்து செய்யவும், தனது மனைவியை தன்னிடம் ஒப்படைக்க கோரியும் இளைஞர் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி விகாஸ் பால்,
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இஸ்லாமிய சட்டத்தின்படி 15 வயதை கடந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார். மேலும், பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் நடைபெறலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த திருமணத்தை பெண் வீட்டார் ஒப்புக் கொண்டதால் வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார்.