இனி முஸ்லீம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கு வீடு செல்லலாம் - அரசு அறிவிப்பு!
முஸ்லீம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கு வீடு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான்
ஆந்திராவில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தற்போது மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய,
அரசு முக்கிய உத்தரவு
மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லீம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
மேலும், அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்தது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.