புனித கங்காவை மதிக்கிறேன்.. ஆனால் இது மகா கும்பமேளா அல்ல -மம்தா சொன்ன அதிர்ச்சி தகவல்!
மகா கும்பமேளா குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கும்பமேளா
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் மகாகும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் 55 கோடிக்கு அதிகமானவர்கள் புனித நீராடி உள்ளனர். அந்த வகையில் கடந்த தை அமாவாசை அன்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
60 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்ட்பேரவை கூட்டத்தொடரில் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது பேசியவர்,’’மகா கும்பமேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது.

கங்கை நீரில் மனித,விலங்கு கழிவு..புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்தது இல்லை -அதிர்ச்சி தகவல் !
நான் மகா கும்பமேளாவையும், புனித கங்கா மாதாவையும் மதிக்கிறேன்.ஆனால், கும்பமேளாவில் சரியான திட்டமிடல் இல்லை. முக்கிய நபர்.க்களுக்கும், பணக்காரர்களுக்கும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள கூடாரங்கள் அங்கு அமைக்கப்படுகின்றன.
மம்தா
ஏழைகளுக்குக் கும்பமேளாவில் எந்த ஏற்பாடும் இல்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை’’ என்று குற்றம்சாட்டினார்.மதம் என்பது விற்பனைக்கானது அல்ல.பாஜக மதத்தை விற்று நாட்டைப் பிளவுபடுத்துகிறீர்கள் என்று மம்தா கூறினார்.
அதற்கு மேற்குவங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜி முழு இந்து சமூகத்தையும் தாக்குகிறார் என்று கூறினார். அதற்கு மம்தா பானர்ஜி, இது மகா கும்பமேளா அல்ல மரணக் கும்பமேளா என்று கூறினார்.