இந்து கோவிலில் விமர்சையாக முஸ்லிம் ஜோடிக்கு திருமணம் - நெகிழ்ச்சி சம்பவம்
இந்து கோவிலில் முஸ்லிம் ஜோடி திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கோவில்
இமாச்சல பிரதேசம், ராம்பூரில் சத்தியநாரா யணன் கோவில் உள்ளது. இந்த வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகமும் செயல்படுகிறது. இங்கு திருமணம் செய்துக்கொள்ள முஸ்லிம் மதத்தை சேர்ந்த ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் விருப்பம் தெரிவித்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.
இதன்படி கடந்த 3-ம் தேதி கோயிலில் ராகுல் ஷேக், நிமாயத் மாலிக் ஜோடிக்கு முஸ்லிம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து கோவில் செயலாளர் வினய் சர்மா, சத்தியநாராயணன் கோயில் நிர்வாகத்தை விஎச்பி கவனித்து வருகிறது.
முஸ்லிம் திருமணம்
கோயில் வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்படுகிறது. விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான அமைப் புகள் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன. அதை பொய்யாக்கும் வகையில் இந்து கோயில் வளாகத்தில் முஸ்லிம் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இந்த திருமணத்தில் முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்துக்களும் கலந்து கொண்டனர். திருமண விருந்து, விழா ஏற்பாடுகள் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெற்றன. திருமணம் மட்டும் முஸ்லிம் பாரம்பரியத்தின்படி நடைபெற்றது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து மணப்பெண்ணின் தந்தை மகேந்திர மாலிக், “கோயில் நிர்வாகிகள், ராம்பூர் நகர மக்கள் எனது மகளின் திரும ணத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். எனது மகள் எம்.டெக். சிவில் இன்ஜினீயர். மருமகன் ராகுல் ஷேக்கும் சிவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இருவரின்விருப்பத்தின்படி சத்தியநாராயணன் கோயிலில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது" எனத் தெரிவித்துள்ளார்.