ட்விட்டரை கைகழுவும் எலான் மஸ்க் : வழக்கு தொடரும் ட்விட்டர்

Twitter Elon Musk
By Irumporai Jul 09, 2022 04:37 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, 44 பில்லியன் டாலர்களுக்கு டவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க ட்விட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது.

விவரங்களை கொடுக்க மறுத்த ட்விட்டர்

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ட்விட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை வைத்தார்.

ட்விட்டரை கைகழுவும் எலான் மஸ்க் : வழக்கு தொடரும் ட்விட்டர் | Musk Abandons Twitter Company

  ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.

பாலியல் சர்சையில் சிக்கிய எலன் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். பொலி கணக்குகள் கேட்ட தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

வழக்கு தொடரும் ட்விட்டர்

44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொட உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும்ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குமதிப்பு கடுமையாகச் சரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக மஸ்க் அறிவித்த நிலையில் 54.20 டாலராக உயர்ந்தநிலையில் அதைவிட 36% குறைந்து, 34.58 டாலராகச் சரிந்தது.