பாலியல் சர்சையில் சிக்கிய எலன் மஸ்க் - குற்றத்தை மறைக்க பணம் கொடுத்தாரா?

Elon Musk
By Irumporai May 20, 2022 07:50 AM GMT
Report

ஸ்பேஸ் எக்ஸ் ஊழியரை எலன் மஸ்க் பாலியல்ரீதியாக அணுகியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

எலன் மஸ்க் தற்போது ஒரு பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார், கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என செய்தி வெளியானது 

இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் இந்திய மதிப்பில 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இது குறித்து எலன் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில்நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். 

என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.

எஎன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை. இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.