போலியான இசை மற்றும் ரசிகர்கள் மூலம் 83 கோடி ராயல்டி - Spotifyயை ஏமாற்றிய இசையமைப்பாளர்
ai மூலம் பாடல்கள் மற்றும் ரசிகர்களை உருவாக்கி இசையமைப்பாளர் 83 கோடி பெற்றுள்ளார்.
மைக்கேல் ஸ்மித்
AI தொழில்நுட்பம் அணைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. AI பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி பல கோடிகளை ராயல்டியாக பெற்றுள்ளார் இசையமைப்பாளர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதான மைக்கேல் ஸ்மித் என்ற இசை கலைஞர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயன்படுத்தி பல்வேறு பாடல்களை உருவாக்கியுள்ளார்.
83 கோடி ராயல்டி
பாடல்களை உருவாக்கியதோடு நிற்காமல் Spotify, Apple Music மற்றும் Amazon Music போன்ற இசை சேவை தளங்களில் இந்த பாடல்களை பதிவேற்றியுள்ளார். மேலும் போலியான கேட்போர்களை (bot) உருவாக்கி இந்த பாடல்களை கேட்க வைத்து, 10 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ83 கோடி) ராயல்டி பணம் பெற்றுள்ளார்.
7 ஆண்டுகளாக இதே போல் சம்பாதித்த இவர் தற்போது சிக்கியுள்ளார். இந்நிலையில் இவர் செப்டம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றத்துக்காக இவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய ராயல்டியை மோசடி செய்து ஸ்மித் பெற்றுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் எந்த மோசடியும் நடக்கவில்லை என இந்த குற்றச்சாட்டை ஸ்மித் மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் ஸ்மித்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.