அரியவகை நோய் பாதிப்பு - பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்!
இசையமைப்பாளர் ரகுராம் அரியவகை நோயால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
ரகுராம்
இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த், ரவீனா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் 2017 ஆம் ஆணிடு வெளியான படம் ஒரு கிடாயின் கருனை மனு. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கு ரகுராம் இசையமைத்திருந்தார். இந்தப்படம் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து சில திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தற்போது சத்திய சோதனை திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மறைவு
இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர் சிறு வயதிலேயே அரியவகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.