பிரபல இசையமைப்பாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு - திரையுலகினர் அதிர்ச்சி
தமிழ் திரையுலகம் ஏற்கனவே கொரோனா காலத்தில் பல்வேறு பிரபலங்களை இழந்துள்ளது.
இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த், பாடகர் எஸ்.பி.பி, நடிகர் விவேக், துணை நடிகர்கள் என பலரும் உயிரிழந்தனர். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் சாலை விபத்தில் பிரபல இசையமைப்பாளர் செல்வதாசன் (49) உயிரிழந்த சம்பவம் மீண்டும் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கில் இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றபோது திடீரென நிலை தடுமாறி விழுந்துள்ளனர். இதில், இசையமைப்பாளர் செல்வதாசன்(49) பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இசையமைப்பாளர் செல்வதாசன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.