பிரபல இசையமைப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Death
By Sumathi Aug 31, 2022 01:10 PM GMT
Report

 பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜான் வர்கீஸ் மரணம் அடைந்தார்.

 ஜான் பி வர்கி

மலையாள திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பிரபல இசையமைப்பாளர் ஜான் பி வர்கி. இவருக்கு வயது 51. இவர் கேரளாவில் பிரபலமான ராக் இசைக் கலைஞர்களில் ஒருவராகவும் இருந்தார்.

பிரபல இசையமைப்பாளர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Music Director John P Varkey Passed Away

கம்மட்டிப்பாடம், ஈடா, உன்னம், புரோஷன், ஒலிப்போரு உள்ளிட்ட பல மலையாள படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இடி சங்கதி உள்ளிட்ட சில தெலுங்கு படங்களுக்கும், கார்த்திக் உள்ளிட்ட சில கன்னட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

திடீர் மரணம்

திரைப்பட விழாக்களில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். இசை ஆல்பங்களும் வெளியிட்டு உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் அருகே குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜான் வர்கிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணம் அடைந்தார்.

இவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.