மனைவி சைந்தவியை பிரியும் ஜி.வி.பிரகாஷ் - விரைவில் விவகாரத்து? வெளியான பகீர் தகவல்!
ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலே’ பாடலில் வரும் மழலை குரலுக்கு சொந்தக்காரர். வசந்தபாலன் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தொடங்கினார். தனது முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து மெகா ஹிட்டான பாடல்களை அமைத்துக்கொண்டு இருந்த ஜிவி பிரகாஷ், சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா, டார்லிங் படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.
விவாகரத்து
முன்னதாக ஜிவி.பிரகஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த நிலையில், ருவரும் கருத்து வேறுபாட்டால் கடந்த சில மாதங்களாக பிரிந்திருப்பதாகவும், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் செய்தி கசிந்திருக்கிறது.
சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து விவாகரத்து செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பு துறப்பு ; ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஜோடி விவாகரத்து செய்தி முற்றிலும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவலே, இதற்கும் IBC பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.