ஸ்மிருதி மந்தனா காதல் திருமணம் இவருடன்தான் - உறுதிசெய்த இசை அமைப்பாளர்!
ஸ்மிருதி மந்தனா திருமணம் குறித்து பாலிவுட் இசையமைப்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவரும் தொடக்க வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, ஐஐசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதும் முக்கிய போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சால், மாநில பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
காதல் திருமணம்
அப்போது பேசிய அவர், ”ஸ்மிருதி மந்தனா விரைவில் இந்தூரின் மருமகளாக உள்ளார். நான் சொல்ல விரும்புவது அவ்வளவு தான்” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஜோடி காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஒன்றாக கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பலாஷ் முச்சால் தற்போது தனது முதல் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் அவிகா கோர் மற்றும் சந்தன் ராய் ஆகியோர் நடிக்கின்றனர்.