என் அம்மாவே தப்பா நெனச்சங்க; இன்னும் அது கிடைக்கல - ஏர்.ஆர்.ரஹ்மான் உருக்கம்!
தனது மறைந்த தாயார் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
ஏர்.ஆர்.ரஹ்மான்
தமிழ் திரையுலகில் இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மான். ரோஜா படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.
தொடர்ந்து பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து, பாலிவுட்டிலும் தடம் பதித்து இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார். மேலும், ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார். கடைசியாக இவரது இசையமைப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியாகியிருந்தது.
சர்வதேச விருதுகள்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் "நான் பெற்ற சர்வதேச விருதுகள் அனைத்தையும் தாயின் துபாய் வீட்டில் தான் வைத்திருந்தேன். அவர் அதை ஒரு டவலில் சுற்றித்தான் வைத்திருப்பார்.
ஏனெனில், அவை அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை என்று அவர் தவறாக நினைத்துள்ளார். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரது அறைக்கு சென்று அங்கிருந்த விருதுகளை துபாய் ஃபிர்தௌஸ் ஸ்டுடியோஸுக்கு மாற்றிவிட்டேன்.
மேலும், சில விருதுகள் என் கைக்கு கிடைக்கவில்லை. ஏனெனில், அதனை படத்தின் இயக்குநர்கள் என்னுடைய நினைவுப் பரிசாக வைத்துக் கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.