மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்!

Tamil Cinema A R Rahman Tamil Actors Tamil Actress
By Jiyath Jan 25, 2024 04:30 PM GMT
Report

இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மான் மகளின் திருமணம் குறித்து பத்திரிகையாளர் கம்பீரன் பேசியுள்ளார்.

ஏர்.ஆர்.ரஹ்மான்

தமிழ் திரையுலகில் இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரஹ்மான். ரோஜா படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்! | Kambeeran About A R Rahman Daughter Marriage

தொடர்ந்து பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து, பாலிவுட்டிலும் தடம் பதித்து இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார். மேலும், ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.

கடைசியாக இவரது இசையமைப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, சாய்ரா பானு என்பவருடன் திருமணமாகி இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். அதில் கதீஜா என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல தமிழ் நடிகரின் மகன் - ரசிகர்கள் வாழ்த்து!

மகள் திருமணம் 

இந்நிலையில் அந்தத் திருமணம் குறித்து பத்திரிகையாளர் கம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "ஏ.ஆர்.ரஹ்மான் அவரது குழந்தைகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார்.

மகளை பணியாளருக்கு திருமணம் செய்து வைத்த ஏர்.ஆர்.ரஹ்மான் - பிரபலம் தகவல்! | Kambeeran About A R Rahman Daughter Marriage

தான் சொல்வதைத்தான் அவர்கள் கேட்க வேண்டும்; செய்ய வேண்டும் என்று என்றைக்குமே ஆதிக்கம் செலுத்தியதில்லை. அவருடைய மகள் கதீஜாவை தன்னிடம் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

கதிஜாவின் திருமணம் ஏ.ஆர்.ரஹ்மானின் தற்போதைய அந்தஸ்துக்கான திருமணமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். ஆனால் அவர் அந்தப் பையனுடைய கேரக்டரைத்தான் பார்த்தார். அந்தப் பையன் ரொம்பவே நல்ல கேரக்டர் என்று தெரிந்தது. உடனே அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்" என்றார்.          

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி!

விஜய் என்ன பெரியா சூப்பர் ஸ்டாரா..? உண்மைய ஒத்துக்க தயங்கமாட்டேன் - எஸ்.ஏ.சி அதிரடி!

You May Like This Video