பல்கலையில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலால் 4 மாணவர்கள் பலி!

Kerala India Death
By Jiyath Nov 26, 2023 03:24 AM GMT
Report

கேரளாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இசைக்கச்சேரி

கேரள மாநிலம் களமசேரியில் கொச்சி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகி 'நிகிதா காந்தி' பங்கேற்று இசைக் கச்சேரியை நடத்தினார்.

பல்கலையில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலால் 4 மாணவர்கள் பலி! | Music Concert 4 Students Died In Kerala University

இந்த கச்சேரியானது திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அப்போது அரங்கம் நிரம்பியதால் சில மாணவ-மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அது நடந்தால் 2024ல் இலங்கை தீவே காணாமல் போகும்; சென்னை வரை.. - படையப்பா நடிகர் பரபரப்பு!

அது நடந்தால் 2024ல் இலங்கை தீவே காணாமல் போகும்; சென்னை வரை.. - படையப்பா நடிகர் பரபரப்பு!

4 பேர் பலி 

இதனையடுத்து அவர்கள் முண்டியடித்து முன்னேறியதில் கூட்ட நெரிசல் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 64க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பல்கலையில் பிரபல பாடகியின் இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலால் 4 மாணவர்கள் பலி! | Music Concert 4 Students Died In Kerala University

அவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.