ஹோட்டலில் சிக்கிய பிரபல இசையமைப்பாளரின் மகள் - போட்ட ஆட்டத்தால் பரபரப்பு!

Chennai Crime
By Sumathi Oct 08, 2025 07:06 AM GMT
Report

கஞ்சா போதையில் ஆட்டம் போட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை பார்ட்டி

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் உள்ள பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பார்ட்டி நடைபெற்று வருவதாக

ஹோட்டலில் சிக்கிய பிரபல இசையமைப்பாளரின் மகள் - போட்ட ஆட்டத்தால் பரபரப்பு! | Music Composers Daughter Arrest Drug Party Chennai

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌ அதன்படி சோதனை நடத்தியதில், பார்டி முடிந்த பின்னர், சிலர் அதே ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து தெரிய வந்தது.

மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிட்ட ராணுவ வீரர் - 6 மாதத்தில் விபரீதம்!

மனைவியின் கள்ளக்காதலுக்காக உயிரைவிட்ட ராணுவ வீரர் - 6 மாதத்தில் விபரீதம்!

18 பேர் கைது

இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அனைவரும் அறையில் கஞ்சா புகைத்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. பின் போலீஸார் 3 பெண்கள், ஹோட்டல் மேலாளர் உட்பட 18 பேரை கைது செய்தனர்.

ஹோட்டலில் சிக்கிய பிரபல இசையமைப்பாளரின் மகள் - போட்ட ஆட்டத்தால் பரபரப்பு! | Music Composers Daughter Arrest Drug Party Chennai

தொடர்ந்து, கீழ்பாக்கம் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் வாட்ஸ் ஆப் குழு ஒன்றை அமைத்து மாதம் இருமுறை போதை விருந்தில் பங்கேற்று வந்ததும், கைது செய்யப்பட்ட 18 பேரில் ஒரு பெண் ‘ஆனந்தபுரத்து வீடு’ திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகள் என்பதும்,

பெங்களூருவை சேர்ந்த இவர் சென்னையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, 18 பேரையும் ஜாமினில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.