டாக்டர் பட்டம் கிடைத்ததில் மகிழ்ச்சி - டி.இமான்
இசையமைப்பாளர் டி.இமானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
டி.இமான்
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். இவர் விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வந்தார். அதில் குறிப்பாக, 2010ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் பிரபலமானார்.
அதனையடுத்து, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினி முருகன், விஸ்வாசம், அண்னாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தேசிய விருது, தமிழக அரசின் விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வென்று குவித்துள்ளார்.
கெளரவ டாக்டர் பட்டம்
இந்நிலையில், இசைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சிலின் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி.
Glad to receive the Honorary Doctorate from the International Anti Corruption and Human Rights Council (Recognised by Government of India) in the field of Musical Arts!
— D.IMMAN (@immancomposer) October 31, 2022
Honoured by this gesture!
Thanks for all the love and wishes!
Praise God!
-D.Imman pic.twitter.com/5OjsohUZPi
அனைவரின் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.