இசையமைப்பாளர் டி.இமானுக்கு இரண்டாவது திருமணம் - எனக்கு இவர் தான் மனைவியாக வரனும்..!
சினிமா துறையில் அண்மை காலமாக விவாகரத்து என்பது அதிகரித்து கொண்டே செல்கின்றது. சமந்தா,நாக சைத்தான்யா,நடிகர் தனுஷ்,ஐஸ்வர்யா மற்றும் இயக்குநர் பாலா போன்ற திரைபிரபலங்களின் விவாகரத்து அதிர்ச்சியை கொடுத்த நிலையில்,
தற்போது மற்றொரு சினிமா பிரபலம் விவாகரத்தை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைபாளர்களில் ஒருவர் டி.இமான்.ஷ இவர் அண்மையில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
கோலிவுட்டில் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான்.இவரின் இசைக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இதனிடையே சமீபத்தில் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறினார். இது அவர்களது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இவருக்கும் மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.
இந்தநிலையில் இமான் மீண்டும் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் அரேஞ்ட் திருமணமே என்றார்.
தற்போது தான் நான் மிகவும் சுதந்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.தன்னுடைய இரண்டாவது திருமணத்தை எச்சரிக்கையுடன் கையாள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே அவர் தனக்கு வரும் இரண்டாவது மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனக்கு வரும் மனைவி விதவையாகவோ அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும்.
மேலும் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும்,தன்னுடைய குழந்தைகளிடம் அன்பை வெளிகாட்ட வேண்டும்
என்று தெரிவித்துள்ளார்.