சென்னை வந்த ஓமன் விமானம் - 157 பேர் மரண பிடியை தாண்டி வந்த சம்பவம்!

Chennai Flight
By Vidhya Senthil Oct 06, 2024 06:00 AM GMT
Report

 விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் உயிர் தப்பினர்.

 ஓமன் விமானம்

மஸ்கட்டிலிருந்து வந்த ஓமன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென டயர் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

chennai airport

ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் 148 பயணிகள் , 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் 2.45 மணிக்குப் புறப்பட்ட விமானம் மாலை 5.30 மணிக்கு நகரில் தரையிறங்கியது.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு - பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

அப்போது சென்னை விமான நிலைய ஓடுபாதையில் விமானம் ஓடிக்கொண்டிருந்த போது, விமானத்தின் பின் பக்கத்தில் இடது பக்க டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சம்பவத்தால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் பயந்து அலறினர்.

 விமானி

அப்போது விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு, விமானத்தைப் பாதுகாப்பாக ஓடுபாதையில் நிறுத்தினர்.அதன் பிறகு விமான பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.

muscat flight

தொடர்ந்து விமானத்தின் டயரை மாற்றி சீர் செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். சாமர்த்தியமாகச் செயல்பட்டு  157 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானி, துணை விமானியைப் பயணிகள் மற்றும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் பாராட்டினர்.