தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Vidhya Senthil Aug 19, 2024 05:23 AM GMT
Report

      தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  தமிழக அரசு

1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் சென்னையை சேர்ந்தவர்.முதுநிலை கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்பை முடித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தில் சார் ஆட்சியராக தனது பணியை தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்! | Muruganandam Appointed As The New Chief Secretary

2019-ம் ஆண்டு பிப்.8-ம் தேதி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக முன்னாள் தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு பிப்.10-ம் தேதி முடிவடைந்தது.  

நான் மக்களின் நண்பன்.. பீல்ட்ல குதித்த தலைமைச் செயலாளர் இறையன்பு - மிரண்டு போன அதிகாரிகள்

நான் மக்களின் நண்பன்.. பீல்ட்ல குதித்த தலைமைச் செயலாளர் இறையன்பு - மிரண்டு போன அதிகாரிகள்

ஐஏஎஸ் அதிகாரி

இந்த நிலையில் தமிழக அரசின் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்ட நிலையில், அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்! | Muruganandam Appointed As The New Chief Secretary

  இவர் தமிழகத்தின் 50வது தலைமைச் செயலர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார். முன்னதாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்த போது, நிதித்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.