நான் மக்களின் நண்பன்.. பீல்ட்ல குதித்த தலைமைச் செயலாளர் இறையன்பு - மிரண்டு போன அதிகாரிகள்
பைல்கள் பார்த்தது அந்த காலம்...பீல்ட்ல இறங்கி பார்ப்பது தான் இந்த காலம் என்று களத்தில் குதித்துள்ளார் தலைமைச் செயலாளர் இறையன்பு.
திமுக ஆட்சி அமைந்தவுடன் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இறையன்பு.
சிறந்த எழுத்தாளர், நேர்மையான கரங்களுக்கு சொந்தகாரர், ஏழை மக்களின் நண்பன், ஏழைகளுக்காகவே சேவை செய்யும் சிறந்த அதிகாரி ஆகிய பன்முகங்களை கொண்டவர்.
இவர் தலைமைச் செயலாளராக பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
தன்னை திருப்பதிப்படுத்த தான் எழுதிய புத்தகங்களை வாங்குமாறு பள்ளிகளை வற்புறுத்தக் கூடாது என முதல் அறிவிப்பை வெளியிட்டு அதிகாரிகளை அலற வைத்தார்.
இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற போது தனக்கு எளிமையான உணவு போதும் ஆடம்பர உணவுகள் வேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
மேலும் தரமற்ற சாலையின் மீதே புதிய சாலை போடுவதால் எந்த பயனும் இல்லை என்பதால் அதை பெயர்த்துவிட்டு மேடு பள்ளத்திற்கேற்ப மழை நீர் எந்த குடியிருப்புக்குள்ளும் புகுந்துவிடாதவாறு போட வேண்டும் என உத்தரவிட்டார்.
இவரின் எளிமையால் இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் பேசும் நபராக வலம் வருகிறார். அண்மையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற பிரிவுக்கு மனுக்கள் குவிந்து வருகிறது.எனவே மக்களின் குறைகளை மாவட்ட அளவில் தீர்க்குமாறு மேலும் ஒரு அன்பு உத்தரவை பிறப்பித்தார்.இப்படி அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வந்த இறையன்பு களத்திலும் குதித்து இருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன.
அந்த பணிகளை இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அப்போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கும் அவருடன் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளர்கள் சிலர் தலைமைச் செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்வது, கையெழுத்திடுவது, பார்வையிடுவது என்றுதான் இருந்தார்கள்.
ஆனால் இறையன்போ தனக்கான அதிகாரம் என்ன என்பதை சரி வர தெரிந்து கொண்டு ஃபைல்களை மட்டும் பார்க்காமல், ஃபீல்டையும் பார்த்து வருகிறார். மக்கள் நலனில் தீவிர அன்பு காட்டும் இவரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.