பருவ வயதை அடைந்ததும் உடல் பாகத்தை வெட்டும் பெண்கள் - ஏன் தெரியுமா?
பருவ வயதை அடைந்ததும் உடல் பாகத்தை வெட்டிக்கொள்ளும் பழங்குடியினர் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
முர்சி பழங்குடியினர்
தெற்கு எத்தியோப்பியாவின் ஓமோ பள்ளத்தாக்கில் முர்சி பழங்குடியினர் வாழ்கின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை மேய்ப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
முர்சி பழங்குடியினரில், ஒரு பெண் பருவ வயதை அடையும் போது, அந்த பெண்ணின் கீழ் உதட்டை கத்தியால் வெட்டி, களிமண் வட்டு செருகும் சடங்கை மேற்கொள்கின்றனர்.
களிமண் வட்டு
பின், அந்த துளை நாளுக்கு நாள் மெதுவாக பெரிதாகி, அதில் களிமண்ணால் ஆன ஒரு வட்டத் தட்டு (லிப் பிளேட்) செருகப்படுகிறது. இதில், சில பெண்கள் 12 செ.மீ அல்லது அதற்கு மேற்பட்ட அளவுள்ள வட்டுகளை அணிகிறார்கள். இது அழகு, கண்ணியம் மற்றும் கலாச்சார அடையாளத்தின் அடையாள பார்க்கப்படுகிறது.
வட்டு பெரியதாக இருந்தால், அப்பெண்ணின் வரதட்சணை அதிகமாகுமாம். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கப் பெண்களை அடிமைகளாக விற்க வந்தவர்கள், பார்க்க அழகாக இருக்கும் பெண்களை குறிவைத்துள்ளனர். எனவே பாலியல் வன்கொடுமை மற்றும் அடிமைத்தனத்திலிருந்து தப்பிக்க,
முர்சி பெண்கள் உதடுகளை வெட்டிக் கொண்டு தங்களை சிதைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். காலப்போக்கில் இந்தப் பழக்கம், அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.