தூங்கவிடாமல் அழுத குழந்தையைின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை
தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை அழுதுக்கொண்டிருந்ததால், தான் தூங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தையே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கத்தில் எழுந்து அழுத குழந்தை
அரியானா மாநிலம், பரிதாபாத் பகுதியில் கணவன், மனைவிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. நேற்று வேலையை முடித்துவிட்டு கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரின் மனைவி அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாட சென்றுள்ளார்.
தனது ஒன்றரை வயது மகனை வீட்டில் தூங்க வைத்து விட்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். வேலை முடித்து விட்டு வந்த கணவன் குழந்தை அருகில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது, பாதி தூக்கத்தில் எழுந்த குழந்தை அம்மா இல்லாததால் கத்து அழுதுள்ளது. தூங்கத்தில் இருந்த தந்தைக்கு குழந்தையின் அழுகை சத்தத்தால் எரிச்சல் வந்துள்ளது.
கழுத்து நெரித்து கொலை
இதனையடுத்து, மகனின் அழுகையை அடக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும், அக்குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
அப்போது, குழந்தை துடிதுடித்து மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்திருந்தது. அக்கம், பக்கத்தினரை பார்த்ததும் தந்தை அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வீட்டிற்கு திரும்பிய தாய் குழந்தையின் நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கதறி அழுதார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை தப்பி ஓடிய தந்தையை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.