3 குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலைக்கு முயன்ற கொடூரம்!
தென்பெண்ணை ஆற்றில் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப சண்டை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் இவரது மனைவி அமுதா. பரசுராமன் கட்டிட மேஸ்திரியாக பனி புரிந்து வருகிறார். இருவருக்கும் இளவரசன், குறளரசன் என இரண்டு மகன்களும் யாழினி என்ற 7 மாத மகளும் இருந்தார்கள்.
இந்நிலையில், குடும்ப சண்டை காரணமாக அமுதா தன் குழந்தைகள் மூன்று பேரையும், ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அமுதா தற்கொலை செய்ய முயன்றபோது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரைக் காப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைகள் பலி
குழந்தைகள் மூன்று பேரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தைகளின் உடலை கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இதன் தொடர்பாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையில் சில மாத காலங்களாக சண்டை இருந்துவந்ததாக தெரியவந்துள்ளது.
அதற்கு பின் வேப்பபூர்செக்கடி பகுதியில் உள்ள அமுதாவின் உறவினர் வீட்டு காதணி விழாவிற்குச்சென்ற பரசுராமன் உறவினர் வீட்டிலேயே தங்கயிருக்கிறார். இந்நிலையில் மனஉளைச்சலில் இருந்த அமுதா பள்ளிக்கு சென்றிருந்த மூத்த மகன் நிலவரசனை பள்ளி முடியும் முன்பே வீட்டிற்கு அழைத்து வந்து,
தாய் தற்கொலை முயற்சி
மற்ற இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தென்பெண்ணை ஆற்றிற்கு சென்று மூன்று குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சனை காரணமாக இவர் எடுத்த முடிவால் குழந்தைகளின் உயிர் போன சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.