வலை வீசி மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!
குமரிமாவட்டத்தில் மீன்பிடிப்பதற்காக வலையை வீசும் பொழுது ஆற்றில் தவறி விழுந்த நபர் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தாழக்குடி அருகே உள்ள வீரநாராயண மங்கலத்தை சேர்ந்தவர் இசக்கி ராஜா (35) இவர் அடிக்கடி வீரநாராணமங்கலம் பழையாற்றில் வலை வீசி மீன் பிடிப்பது வழக்கம்.
இந்த நிலையில் இன்று மதியம் இசக்கி ராஜா தனது தந்தையுடன் இப்பகுதியில் உள்ள பழைய ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இசக்கி ராஜா வழுக்கி விழுந்துள்ளார். இதனால் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டு மாயமானார்.
உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தேடி பார்த்து கிடைக்காததால் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததனர். விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் 3 மணி நேரமாக போராடி இசக்கி ராஜாவை சடலமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..