அலுவலகத்திற்குள் புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் - கொடூர கொலை!
தென்காசியில் நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் இளம் வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் 25 வயதான ராஜேஷ். இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் எப்பொழுதும்போல் நேற்று அலுவலகத்தில் பணிக்கு சென்றுள்ளார். பின்னர் இவர் சிறிது நேரம் கழித்து வெளியே செல்வதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் எறியுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் அரிவாளால் இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். மேலும், மோட்டார் சைக்கிளில் ரத்தவெள்ளத்தில் கிடந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணை
இந்நிலையில், இது குறித்து தகவலறிந்ததும் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ராஜேஷின் உறவினர்கள் கதறி அழுதனர், பின்னர் அந்த கும்பலை கைது செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.