பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் - சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்!

Coimbatore Attempted Murder Crime
By Vinothini Jun 05, 2023 09:58 AM GMT
Report

கோவையில் தன் காதலிக்கு பிறந்தநாள் வலது கூற வந்த இளைஞனை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல்

கோவையில் உள்ள சந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியியை சேர்ந்த மகாதேவன் என்பவரின் மகளை காதலித்துள்ளார்.

man-killed-by-his-girlfriends-father

இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் இருவரின் வீட்டிற்கும் தெரியவந்தது, பின்னர் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும், இருவரின் வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியிருந்தனர்.

கொடூர கொலை

இந்நிலையில், தனது காதலியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நேற்று இரவு இவரது நண்பருடன் குடிபோதையில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

man-killed-by-his-girlfriends-father

அப்பொழுது காதலியின் தந்தைக்கும் இவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இவரது காதலியின் தந்தை மற்றும் அவரின் உறவினரான விக்னேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த இளைஞனை சரமாரியாக வெட்டி கொலையோ செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.