பேஸ்புக்கில் மூழ்கிய தங்கையை கதற கதற வெட்டி கொன்ற அண்ணன்!
தூத்துக்குடி அருகே முகநூலில் முழ்கி கிடந்த தங்கையை அண்ணனே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை அனைவரும் ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்கள் 24 மணி நேரம் செல்போனும் கையோடுமே அலைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரம் கிராமத்தை சேர்ந்த மாலைராஜா, 12-ம் வகுப்பு படிக்கும் தன் சகோதரி கவிதாவுக்கு ஆன்லைன் வகுப்பில் பயில ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த போனை கையில் வாங்கினதும், கவிதா முகநூல், வாட்ஸ் ஆப், ஆன்லைன் விளையாட்டு என ஒரே பிஸியாகவே இருந்துள்ளார்.
இதனை கண்ட அவரது சகோதரர், பல முறை கவிதாவை எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, இதே போல் ஸ்மார்ட்போனில் மெய்மறந்து விளையாடி கொண்டிருந்தார். இதனை சகோதரர் கண்டிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சகோதரர் வீச்சரிவாளால் கவிதாவை கதற கதற சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கவிதா ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து, மாலைராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.