மாநகராட்சிகளாக மலரும் 4 நகராட்சிகள்; எதெல்லாம் தெரியுமா? நிறைவேறும் மசோதா!

Tiruvannamalai Pudukkottai Namakkal
By Sumathi Jun 29, 2024 05:16 AM GMT
Report

4 நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது.

மாநகராட்சி தரம்

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகள், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர். கே.என்.நேரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.

tamilnadu

பெரு நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தியதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் உருவாகும் புதிய மாவட்டம் - எந்த பகுதி தெரியுமா?

தமிழகத்தில் உருவாகும் புதிய மாவட்டம் - எந்த பகுதி தெரியுமா?

குரல் வாக்கெடுப்பு

இந்த சட்ட மசோதா இன்று தினம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படுகிறது. மேலும், பேரூராட்சி, நகராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்த சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில்,

மாநகராட்சிகளாக மலரும் 4 நகராட்சிகள்; எதெல்லாம் தெரியுமா? நிறைவேறும் மசோதா! | Municipal Corporations To Emerge In Tamil Nadu

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி,

காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சிகள், 5 ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.