முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்!

Thoothukudi
By Sumathi Aug 18, 2023 10:30 AM GMT
Report

தூத்துக்குடி துறைமுக நகரமாகும். பாண்டிய, சோழ, நாயக்க வம்சங்கள் உட்பட பல்வேறு அரச வம்சங்களால் ஆளப்பட்டது.

தூத்துக்குடி

இந்த மாவட்டம் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் இருந்தது. தமிழகத்தின் 10ஆவது மாநகராட்சியாக ஆகஸ்ட் 5, 2008 இல் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

 வரலாற்று ரீதியில் முத்துக் குளிப்புக்குப் பெயர் பெற்ற இடமாகும். ஒரு அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன. பழங்காலத்திலிருந்தே பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் கோவில்கள் உள்ளன.

முத்துநகர்

முருகப்பெருமானின் ஆறு தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயில், பாறையில் வெட்டப்பட்ட சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளைக் கொண்ட கழுகுமலை ஜெயின் படுக்கைகள் மற்றும் கொற்கை தொல்லியல் தளம் ஆகியவை மாவட்டத்தில் உள்ள சில முக்கிய வரலாற்று இடங்களாகும்.

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

தூத்துக்குடி நகருக்கு திருமந்திர நகர் என்றும் முத்துநகர் என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. பரதவர்கள் கடலில் ஆண்டுக்கு ஒரு முறை முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. கி.மு.123ல் தாலமி என்ற கிரேக்க பயணி தனது பயண நூலில் "சோஷிக் குரி'(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி இறக்குமதி வசதி

அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம் தூத்துக்குடி தான் என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர். டச்சுக்காரர்களின் காலத்தில் தூத்துக்குடி துறைமுகம் கொற்கை துறைமுகமாக செயல்பட்டுள்ளது. இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது.

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

தொழிற்சாலைகள்

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த்துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள், உப்பளங்கள், ஸ்பிக் உரத்தொழிற்சாலை, ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, தூத்துக்குடி அல்காலி ரசாயன நிறுவனம், தேங்காய் எண்ணை ஆலைகள், கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பழைமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் என பல இருக்கின்றன.

பாரம்பரியம், கலாச்சாரம் 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகள் தூத்துக்குடி, தெருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் போன்ற ஆறு தொகுதிகள் உள்ளன. இங்குள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும்.

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

இங்கு வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் துத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பனிமயமாதா தங்கத் தேர் விழா மிகச் சிறப்பான ஒரு விழாவாகும்.

பெயர்போன உப்பு

முத்துக் குளிப்பின் வரலாறு தெரியுமா? தூத்துக்குடியின் சிறப்பும் வளர்ச்சியும்! | Thoothukudi History In Tamil

இங்கு தயாராகும் உப்பு ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும். சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் மெக்ரூன் எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது.