பெற்றோரை எதிர்கொள்ள பயம் - பிறப்புறுப்பில் கத்தியை வைத்து கொண்ட இளம்பெண்
பெண் தனது பிறப்புறுப்பில் தானே கத்தியை வைத்துக்கொண்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இளம்பெண்
மகாராஷ்டிரா மாநிலம்அன்று கோரேகானில் உள்ள ராம் மந்திர் ரயில் நிலையம் அருகே கடந்த 21.01.2025 இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டார்.
காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "அனாதையான என்னை வாரணாசியில் உள்ள எனது மாமா வளர்த்து வந்தார். கடந்த 20 ஆம் தேதி மும்பை வந்த என்னை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பெண் அனாதை என கூறியது பொய் என தெரிய வந்துள்ளது.
அந்த பெண்ணின் பெற்றோர் நலசோபராவில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் தந்தை அவரை கொடுமை செய்ததையடுத்து, வேலைக்கு செல்வதாக கூறி விட்டு, நலசோபரா ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் தனது குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.
இளம்பெண்ணுக்கு ஆறுதல் கூறிய அவர், அர்னாலா கடற்கரைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து, ரயில் நிலையத்திற்கு வந்த பெண், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு பெற்றோரை எதிர்கொள்ள பயந்ததாக கூறப்படுகிறது.
பிறப்புறுப்பில் கத்தி
அப்போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கத்தி, பிளாஸ்டிக்கால் சுற்றப்பட்ட கல் ஆகியவற்றை தானே தனது பிறப்புறுப்பில் நுழைத்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த பெண் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள நிர்மல் நகர் மற்றும் சிவாஜி நகர் காவல் நிலையங்களில் இரண்டு பாலியல் வன்கொடுமை புகார்களை அளித்ததாக அவரது தந்தை தெரிவித்தார். மேலும் இவர் பலமுறை இது போல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த பெண் விசாரணையில், பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறி வருவதால் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.