IPL 2024: ஒரே மேட்ச்.. சத்தமே இல்லாமல் ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை!

Rohit Sharma Mumbai Indians Cricket Sports IPL 2024
By Jiyath Apr 08, 2024 09:00 AM GMT
Report

ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். 

டெல்லி - மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெடுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்தது.

IPL 2024: ஒரே மேட்ச்.. சத்தமே இல்லாமல் ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை! | Mumbai Indians Rohit Sharma Set New Record Ipl

இதனையடுத்து 235 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் - ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா?

பிளாங்க் செக்குடன் காவ்யா மாறன் - ஹைதராபாத் அணி கேப்டனாகும் ரோஹித் ஷர்மா?

ரோஹித் சாதனை  

இந்த போட்டியில் டெல்லி அணி வீரர் ரிச்சர்ட்ஸன், ரோஹித் ஷர்மாவின் கேட்சால் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் ஷர்மா 100 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது ஐ.பி.எல்லில் 4-வது அதிகபட்ச கேட்சாகும்.

IPL 2024: ஒரே மேட்ச்.. சத்தமே இல்லாமல் ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை! | Mumbai Indians Rohit Sharma Set New Record Ipl

மும்பை அணி சார்பாக 2-வது அதிகபட்ச கேட்சாகும். மும்பை அணி சார்பாக பொல்லார்டு 103 கேட்சுகள் பிடித்துள்ளார். இந்த பட்டியில் 110 கேட்சுகளுடன் கோலி முதலிடத்திலும், 109 கேட்சுகளுடன் ரெய்னா இரண்டாவது இடத்திலும், பொல்லார்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.