இத கவனிச்சீங்களா? மும்பையின் படுதோல்வி!! தப்பித்த ரோகித் - மாட்டிக்கொண்ட ஹர்டிக்!

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024 T20 World Cup 2024
By Karthick May 09, 2024 04:03 AM GMT
Report

ஹைதராபாத் அணி நேற்று வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணியின் Play off வாய்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளது.

தோல்வியில் மும்பை

ஹர்டிக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி தொடர்ந்து இந்த சீசனில் தோல்வியை சந்தித்து வருகின்றது. அடுத்தடுத்த போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்த அந்த அணி இது வரை 12 போட்டிகளில் விளையாடி 4'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இவ்ளோ கேவலமா தான் ஆடுவீங்களா? மைதானத்தில் கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய ஓனர்!!

இவ்ளோ கேவலமா தான் ஆடுவீங்களா? மைதானத்தில் கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய ஓனர்!!

பெரும் விமர்சங்களை சந்தித்து வரும் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா, ரோகித் சர்மா, இஷான் கிஷன் என பலரும் பெரிதாக இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்திய அணி அடுத்து டி 20 உலகக்கோப்பையை தொடரில் விளையாடுகிறது.

mumbai indians out of the playoffs in ipl 2024

அதில் ரோகித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா என வரிசையாக வீரர்கள் முக்கிய இடத்தை பிடிக்கிறார்கள். அவர்களின் ஃபார்ம் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

நெருக்கடியில் ஹர்டிக்

இந்த நிலையில், தான் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

mumbai indians out of the playoffs in ipl 2024

தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது 5 முறை கோப்பையை வென்ற அணியான மும்பை. இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு தான் என்றாலும், இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் சற்று ஓய்வு பெற்று உலகக்கோப்பைக்காக தங்களை தயார்ப்படுத்திக்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

mumbai indians out of the playoffs in ipl 2024

கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பாண்ட்யா மீதே அனைத்து விமர்சனங்களும் இருக்கின்றது. அதே நேரத்தில் சொதப்பலான ஃபார்மில் விளையாடி வரும் ரோகித் சர்மா தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ளவும் இந்த வெளியேற்றம் அமைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்.

உலககோப்பை ஐபிஎல் தொடர் முடிந்தவுடனே துவங்குவதால் வீரர்கள் இடைவேளை இன்றி விளையாடும் நெருக்கடியில் இருந்தார்கள். ஆனால், மும்பை அணிக்கு தற்போது அந்த சிக்கல் இல்லை. தோல்விக்காக ஹர்டிக் பாண்ட்யா தான் பாவம் விமர்சிக்கப்படுகிறார்.