இவ்ளோ கேவலமா தான் ஆடுவீங்களா? மைதானத்தில் கே.எல்.ராகுலை அவமானப்படுத்திய ஓனர்!!

Lucknow Super Giants Sunrisers Hyderabad KL Rahul Travis Head
By Karthick May 09, 2024 02:54 AM GMT
Report

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

லக்னோ பேட்டிங்

வெற்றி பெற்றாகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்கை தேர்வு செய்தது.

Pooran batting against SRH

அதன்படி களமிறங்கிய அணியின் ஓப்பனர் டிகாக் 2(5), ஸ்டாய்னிஸ் 3(5) என ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். அணி 57 ரன்களை எடுத்த போது, கேப்டன் கே.எல்.ராகுல் 29(33), க்ருனால் பாண்ட்யா 24(21) ஆகியோரும் வெளியேறிய 66/4 என்ற இக்கட்டான நிலைக்கு அந்த அணி தள்ளப்பட்டது.  

அடுத்து சுற்றிற்கு முன்னேறுமா சென்னை?? உருவான புதிய சிக்கல்

அடுத்து சுற்றிற்கு முன்னேறுமா சென்னை?? உருவான புதிய சிக்கல்

பின்னர் கைகோர்த்த பூரன் மற்றும் படோனி இருவரும் பொறுமையுடன் விளையாடினர். அணியின் ஸ்கோரை உயர்த்திய இருவருமே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பூரன் 48(26), படோனி 55(30) எடுத்தனர். லக்னோ அணி 165/4 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் ஓப்பனர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவருமே ஆரம்பம் முதலே அடுத்து ஆட துவங்கினர்.

Travis head and Abhishek Sharma batting

கடைசி வரை அவுட்டாகாத இவர்கள் வெறும் 9.4 ஓவர்களில் மேட்சை முடித்தனர். டிராவிஸ் ஹெட் 89(30), அபிஷேக் சர்மா 75(28) விளாசினர். 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர் தோல்வியடைந்துள்ள லக்னோ அணி புள்ளிபட்டியலில் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Travis Head 50 celebration against LSG

லக்னோ அணி இன்றும் இரு ஆட்டங்களில் விளையாடவுள்ள நிலையில், இரண்டிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேராக மைதானத்திற்குள் நுழைந்து அவர் கேப்டன் கே.எல்.ராகுலிடம் கோபத்துடன் பேசினார்.

LSG owner shouting at KL Rahul for loss

கைகளை அசைத்து, முகத்தில் கோபத்தை அவர் வெளிப்படுத்திய காட்சிகளை அனைத்து கேமராக்களிலும் பதிவாகியது. ரசிகர்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுவெளியில் வைத்து அணியின் கேப்டனை, ஒரு வீரரை இவ்வாறு உரிமையாளர் விமர்சித்தது கடும் எதிர்வினைகள் பெற்று வருகின்றது.